‘ஆஸ்திரேலிய ஜர்னலிஸ்ட் வியந்து கேட்ட ஒரே கேள்வி’... ‘மறுபடியும் சண்டையை ஆரம்பித்து’... ‘வித்தியாசமாக பதில் சொல்ல ஆரம்பித்த ரசிகர்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் குறைந்த ஓவர் போட்டிகளில் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் ரசிகர்கள் ஏன் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கு ரசிகர்கள் வித்தியாசமாக பதில் அளிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்திய அணியை சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே மோதல் நிலவுவதாலேயே, ரோகித் சர்மாவுக்கு முக்கியமான போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. மேலும் கேப்டன் விராட் கோலியை காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவே சிறந்த கேப்டன் என்றும் ரசிகர்கள் கூறுவது வழக்கம்.

முன்னாள் வீரர்கள் பலரும் ரோகித் சர்மா மற்றும் கோலிக்கு ஆதரவு தெரிவித்து வருவர். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சாதாரணமாகவே ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் அவர்களின் அணிக்கு ஆதரவாகவும் மற்ற அணிகளைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பதிவிடுவர். ஆனால், விராட்கோலி ரசிகர்கள் ரோகித் சர்மாவையும், ரோகித் ரசிகர்கள் கோலியையும் வெறுக்கும் அளவுக்கு பதிவுகளை இணையத்தில் பதிவர்.

எனினும் இந்திய அணியை பொறுத்தவரை ஒரே அணியைச் சேர்ந்த இரு கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் சோலி அமண்டா பெய்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கேள்வியை ரசிகர்களிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் இப்படி வெறுப்பைக் காட்டுகிறார்கள்? இருவருமே இந்திய அணியினர் தானே? எனக்கு விளக்கம் தேவை" எனப் பதிவிட்டிருந்தார். அதனுடன், பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷா 'குணா ஹை யே' (இது ஒரு குற்றமா) என்று கூறுவதுபோல் ஒரு மீம்சையும் பதிந்தார்.

இதையடுத்து அவரின் ட்விட்டர் பதிவால் இரு வீரர்களின் ரசிகர்களும் மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்கள் கோலி மற்றும் ரோகித் குறித்து பல்வேறு கருத்துகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்