'அஸ்வின்' பெயர் சொன்னதும் சைலண்ட் ஆன 'சிஎஸ்கே'.. ஏமாந்த ரசிகர்கள்.. ஒரு வேளை இது தான் காரணமா இருக்குமோ?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சமீப காலமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகிறார்.
போட்றா வெடிய.. மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. ஃபேன்ஸ் ‘செம’ ஹேப்பி அண்ணாச்சி..!
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமில்லாமல், டி 20 போட்டிகளிலும் அஸ்வினின் ஐடியாக்கள் பெரிய அளவில் அவருக்குக் கை கொடுத்து வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 15 ஆவது ஐபிஎல் தொடருக்கு முன்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் அவரை ஐபிஎல் ஏலத்தில் விடுவித்திருந்தது. இதன் பிறகு, இன்று ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே, அஸ்வினை எந்த அணிகள் எடுக்க போட்டி போடும் என்பது பற்றி, கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஏமாற்றிய சிஎஸ்கே
அதில் பலரும், ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலத்தில் எடுக்கும் என்றே பலரும் கருதியிருந்தனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்க எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அஸ்வின் விருப்பம்
சென்னை அணியின் இந்த முடிவு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்விகளையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியிருந்தது. ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடியதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, சர்வதேச அணியில் இடம் கிடைத்திருந்தது. இதன் பிறகு, இந்திய அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் உருவானார். இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பாக, பலரும் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என குறிப்பிட்டனர்.
முயற்சி மேற்கொள்ளவில்லை
சில சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கூட அஸ்வினை மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். இத்தனைக்கும் அஸ்வின் கூட, தன்னுடைய சொந்த ஊர் அணியான சென்னையில் இடம்பெற வேண்டும் என விருப்பபட்டார். ஆனால், அஸ்வின் பெயர் அறிவிக்கப்பட்ட போது, அவரை எடுக்க, எந்த முயற்சியும் சிஎஸ்கே அணி மேற்கொள்ளவில்லை.
ரசிகர்கள் கருத்து
சென்னை அணியிடம் மீதமுள்ள தொகை, மற்ற சில அணிகளுடன் ஒப்பிடும் போது, சற்று குறைவாகவே உள்ளது. இதனால், சில வீரர்கள் அதிக தொகையைத் தாண்டியதும், ஏலத்தில் இருந்து பின் வாங்கினர். ஆனால், அஸ்வினை எடுக்க, சென்னை அணி ஒரு முறை கூட முயற்சி செய்யவில்லை. இது பற்றி தான், தற்போது பலரும் பேசி வருகின்றனர்.
காரணங்கள் என்ன?
அதுவுமில்லாமல், சிஎஸ்கே அப்படி செய்ததற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி, தோனி, ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அகி ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில், மொயீன் அலி வலதுகை ஆப் ஸ்பின்னர் ஆவார். இன்னொரு பக்கம், ரவிச்சந்திரன் அஸ்வினும் ஆப் ஸ்பின்னர் என்பதால், அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்களையும் அணியில் எடுக்க வேண்டாம் என்று கூட சிஎஸ்கே நினைத்திருக்கலாம்.
ரசிகர்கள் ஏமாற்றம்
அதே போல, கையில் தொகையும் குறைவாக இருக்க, அதிகம் விலை போகும் வீரர்களை எடுக்க வேண்டாம் என்றும் கூட நினைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும், அஸ்வினை மீண்டும் சிஎஸ்கே அணியில் பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடந்த ஏலம்.. திடீரென சரிந்து விழுந்த ஏலதாரர்.. பதற்றம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் மெகா ஏலம் : சிஎஸ்கே அணி எடுத்த முடிவு.. கடும் வேதனையில் சென்னை ரசிகர்கள்.. ஏலத்தில் நடந்தது என்ன?
- அஸ்வினை இந்த தடவை எந்த அணி ஏலத்துல எடுத்திருக்காங்கன்னு பாருங்க. டெல்லி கூட போட்டி போட்டு தட்டி தூக்கிய அணி..!
- ஓகோ.. தோனி அந்த டைம்ல தான் எல்லாத்தையும் சொல்லுவாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
- IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
- ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' டீம்'ல இந்த 3 பேர் ஆடுனா செமயா இருக்கும்'ல.. சிவகார்த்திகேயன் போட்ட லிஸ்ட்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்
- கேப்டன்ஷி பத்தி மட்டும் பேசிட்டு.. இதை பாராட்ட மறந்திடுறீங்க.. தோனி குறித்து அஸ்வின்..!
- "அஸ்வினுக்கு எதிரா ஆடுறதுனா.. செஸ் விளையாடுறது போல ஆடனும்" - உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் சொன்ன நச் கருத்து
- என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!
- அவருக்கு செம டிமாண்ட்.. இந்த தடவை ரொம்ப பணத்தை ரெடியா வச்சிக்கோங்க.. சிஎஸ்கேவை அலெர்ட் பண்ணிய அஸ்வின்..!
- ஐபிஎல் ஏலத்தில் CSK வீரரை குறி வைக்கும் RCB?.. அதுக்காக இப்பவே பணம் ஒதுக்கிட்டாங்களாமே.. கசிந்த தகவல்..!