அவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13-வது சீசனுக்காக ஐபிஎல் ஏலம் நேற்று நடைப்பெற்றது. இதில் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கு கொண்டு, தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிகளுக்கு இடையில் தேர்வு செய்தனர்.

இந்நிலையில், 2020 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம் கரனை 5.50 கோடிக்கும், பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும், ஹேசல்வுட்டை 2 கோடிக்கும், சாய் கிஷோரை 20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது. இதில், 30 வயதான பியூஸ் சாவ்லாவை அதிக விலைக்கு, அதாவது 6.75 கோடிக்கு, சிஎஸ்கே வாங்கியதால், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் அந்த அணியை ட்விட்டரில், வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் இன்னும் சில நாட்களில் 31 வயதாகப் போகும் பியூஸ் சாவ்லா, இந்த ஆண்டுக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்திய வீரர் என்பதால், ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், கொல்கத்தாவின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பியூஷ் சாவ்லாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தது.

அதற்கு கீழே, கொல்கத்தா அணி, ‘பியூஷ் சாவ்லாவை நீங்கள் ஏலம் எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியும்’ என்று பதிவிட்டு #DadsArmy என்று ஹேஷ்டாக் போட்டு, பியூஸ் சாவ்லா தனது மகனுடன் இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளது. இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்