உலகக்கோப்பைல 'அவரத்தான்' செலக்ட் பண்ண நெனைச்சோம்... ஆனா 'நடந்தது' என்னன்னா?... கட்டக்கடைசியாக 'ரகசியத்தை' உடைத்த தலைவர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை போட்டியில் அம்பாதி ராயுடு தேர்வு செய்யப்படாத காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போனது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அம்பாதி ராயுடு இடம் பெறாதது அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராயுடுவும் வெளிப்படையாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்குப்பின் அதற்கான காரணம் குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்து இருக்கிறார்.அதில்,'' உலகக்கோப்பை தேர்வுக்குழுவில் கண்டிப்பாக ராயுடு இடம் பிடிப்பார் என நினைத்தோம். ஆனால் கடைசி நேரத்தில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் விஜய் சங்கர் நன்றாக செயல்பட்டார். இதனால் அவர் அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று நினைத்து அவரை தேர்வு செய்தோம். இதனால் தான் ராயுடுவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை,'' என்றார்.

தேர்வுக்குழு தலைவராக இருக்கும் பிரசாத்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து இந்த மாத இறுதியில் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்