VIDEO: இந்தியா பற்றி பேசிய ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர்.. அப்படியே ஸ்டம்ப் ‘மைக்’-ல் பதிவாகிடுச்சு.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து விக்கெட் கீப்பர் இந்திய அணி குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நியூஸிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று (03.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் கப்தில் 93 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 33 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 16 வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதில் நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் மற்றும் இஷ் சௌதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்தேயு கிராஸ் ( Matthew Cross) இந்திய அணி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. அப்போது பவுலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக விக்கெட் கீப்பர் மேத்தேயு கிராஸ் அடிக்கடி ஏதோ பேசி வந்தார். அப்போது கிறிஸ் க்ரீவ்ஸ் பந்து வீசும்போது, ‘மொத்த இந்தியாவும் உங்கள் பின்னாடி இருக்கிறது க்ரீவோ’ என மேத்தேயு கிராஸ் கூறினார். இது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

அதற்கு காரணம், இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மேலும் நெட் ரன்ரேட்டும் குறைவாக உள்ளது. அதனால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.

ஆனால் நியூஸிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடையும் பட்சத்தில், நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றி பெற வேண்டும் என இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை மனதில் வைத்துதான் மேத்தேயு கிராஸ் அப்படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NZVSCO, T20WORLDCUP, MATTHEWCROSS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்