சென்னை அணிக்கு ‘துணைக் கேப்டன்’ யார்..? முக்கியமான கேள்விக்கு சிஎஸ்கே ‘CEO’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்விக்கு சிஇஓ காசி விஸ்வநாதன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்து நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இதனால் இரு அணி வீரர்களும் டெல்லி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல் வுட் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதுகுறித்து தெரிவித்த ஹேசல் வுட், ‘நான் கிட்டத்தட்ட 10 மாதங்களாக வெவ்வேறு நேரங்களில் பயோ பபுள் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறேன். அதனால் கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டு, அடுத்த 2 மாதம் ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அடுத்து வரும் முக்கிய தொடர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக போகிறேன்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து InsideSport சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன், ‘ஹேசல் வுட்டுக்கு பதிலாக வேறொரு வீரரை தேர்வு செய்வது குறித்து நாங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. சிஎஸ்கே தற்போதும் சிறந்த அணியாகதான் உள்ளது. அதனால் மாற்று வீரர் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

அதேபோல் சிஎஸ்கே அணிக்கு துணைக் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘சிஎஸ்கேவுக்கு துணை கேப்டனை நியமிப்பதையும் தற்போது பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து அணி நிர்வாகம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை அணி, கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ப்ளே ஆஃப்-க்கு கூட நுழைய முடியாமல் வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என தோனி தலைமையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்