‘அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!’ தீபக் சஹாரின் ‘காதலி’ யார் தெரியுமா..? வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே வீர்ர தீபக் சஹாரின் காதலி குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் (Faf du Plessis) 76 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) 98 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.
இந்த நிலையில், இப்போட்டி முடிந்ததும் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் (Deepak Chahar) தனது தோழி ஜெயா பரத்வாஜ் (Jaya Bhardwaj) என்பவரிடம் மைதானத்தில் காதலை வெளிப்படுத்தினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும், அங்கேயே இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சூழலில் தீபக் சஹாரின் காதலில் ஜெயா பரத்வாஜ் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஜெயா பரத்வாஜ், ஹிந்தி பிக்பாஸ் சீசன்-5 போட்டியாளரும், நடிகருமான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தீபக் சஹாரும், ஜெயா பரத்வாஜும் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்துள்ளார். இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைக் காண, பிசிசிஐயின் அனுமதி பெற்று ஜெயா பரத்வாஜை தீபக் சஹார் அழைத்து வந்துள்ளார்.
முன்னதாக சிஎஸ்கே வீரர்களுக்கு ஜெயா பரத்வாஜை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனை அடுத்து ப்ளே ஆஃப் சுற்று முடிந்த பின்னரோ அல்லது இறுதிப்போட்டியின் போதோ தனது காதலை வெளிப்படுத்த தீபக் சஹார் நினைத்துள்ளார்.
ஆனால் அவ்வளவு நாள் தாமதப்படுத்த வேண்டாம் என தீபக் சஹாருக்கு தோனி அறிவுரை வழங்கியதாக கூறப்படுறது. அதனால்தான் நேற்றைய சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டி முடிந்ததும் ஜெயா பரத்வாஜிடம் தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதனாலதான் எல்லாருக்கும் இவரை பிடிக்குது.. மேட்ச் தோத்தாலும்.. ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘சின்ன தல’!
- VIDEO: இதை யாருமே எதிர்பார்க்கலயே.. மேட்ச் முடிஞ்ச கையோட ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிய சிஎஸ்கே வீரர்.. டாப் டிரெண்டிங்கே இதுதான்..!
- என்னங்க ‘தல’ தோனி இப்படியொரு பதிலை சொல்லிட்டாரு.. ‘செம’ அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!
- டி20 உலகக்கோப்பை நெருங்கிட்டு இருக்கு.. வருண் மறந்துகூட அந்த ‘தப்பை’ பண்ணிரக் கூடாது.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
- சாம் கர்ரனுக்கு பதிலாக விளையாட போறது யார் தெரியுமா..? ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த சிஎஸ்கே..!
- VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படி’.. கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்ட கோலி.. கடுப்பான மேக்ஸ்வெல்..!
- VIDEO: அடேங்கப்பா..! வேறலெவல் கேட்ச்.. விராட் கோலியே பார்த்து வியந்துபோய்ட்டாரு..!
- ‘ஒரு 4 டீம் மட்டும்தான் எப்பவுமே டாப்ல இருக்காங்க’!.. ஐபிஎல்ல அந்த ரூல்ஸை மாத்தியே ஆகணும்.. பிசிசிஐக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஆகாஷ் சோப்ரா..!
- ‘பாதி கெய்ல்.. பாதி கோலி’! இவர்தான் கிரேட் டி20 கிரிக்கெட் ப்ளேயர்.. சிஎஸ்கே வீரரை தாறுமாறாக புகழ்ந்த மைக்கேல் வாகன்..!
- ப்ளே ஆஃப் நேரத்துல திடீர்னு ‘விலகிய’ சிஎஸ்கே ஆல்ரவுண்டர்.. இப்போ என்ன பண்றது..? தீவிர ஆலோசனையில் கேப்டன் தோனி..!