VIDEO: சார் ஒருவேளை நியூஸிலாந்து ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவீங்க..? சிரிச்சிகிட்டே ‘ஜடேஜா’ சொன்ன பதில்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசெய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜடேஜா சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஸ்காட்லாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர்களான கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘ஒருவேளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜடேஜா, ‘அப்புறம் என்ன, பொருட்களை பையில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்’ எனக் கூறினார்.
இந்த உலகக்கோப்பை தொடரில்ன் குரூப் 2-ல் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. அதனால் அடுத்த இடங்களில் உள்ள நியூஸிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் நியூஸிலாந்து 3 வெற்றியும், இந்தியா 2 வெற்றியும் பெற்றுள்ளன.
அதனால் அரையுறுதிக்கு தகுதி பெற நியூஸிலாந்துக்கு இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும். ஆனால் இந்தியா 2 போட்டிகளிலேயே வெற்றி பெற்றுள்ளதால், அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை இன்று (06.11.2021) நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தால், நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
அதற்கு காரணம் நியூஸிலாந்தை விட இந்தியாவின் நெட் ரன்ரேட் அதிகமாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிகளின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்கு சென்றுவிடும். அதனால் இன்றையே போட்டியில் நியூஸிலாந்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஏற்கனவே நிரூபிச்சிட்டாரு’.. பேசாம டி20 ‘கேப்டன்’ பதவியை இவர் கிட்ட கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கைகாட்டிய வீரர்..!
- ‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றி கொடுத்த பூஸ்டர்’.. இனி அந்த ‘ஒன்னு’ மட்டும் நடந்தா போதும்.. அப்புறம் இந்தியா ‘அரையிறுதி’-க்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது..!
- VIDEO: ‘கோலிய இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு’.. அன்னைக்கு மேட்ச்ல இப்படியெல்லாம் பண்ணாரா..! திடீரென ‘வைரலாகும்’ வீடியோ..!
- VIDEO: என்னங்க சொல்றீங்க..! இது அவுட் கிடையாதா..? செம கடுப்பான கோலி.. சர்ச்சையில் முடிந்த அம்பயரின் முடிவு..!
- இந்திய அணிக்கு புதிய கோச் ஆன டிராவிட்..‘அவர் கூட எப்போ வேலை பார்க்க போறோம்னு காத்துகிட்டு இருக்கும்’.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
- VIDEO: ரோஹித் அடிச்ச ‘பந்து’ எங்கபோய் விழுந்திருக்கு பாருங்க.. நேத்து மேட்சில் நடந்த ‘சுவாரஸ்ய’ சம்பவம்..!
- VIDEO: ரன் அவுட்டில் இருந்து ‘தப்பிக்க’ வேகமாக ஓடிய பாண்ட்யா.. திடீரென ‘குறுக்கே’ வந்த ஆப்கான் விக்கெட் கீப்பர்.. ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்..!
- VIDEO: செய்தியாளர்கள் சந்திப்புக்கு ‘என்ட்ரி’ கொடுக்கும்போதே ரோஹித் செய்த செயல்.. கவனம் பெறும் வீடியோ..!
- அவரை டீம்ல எடுத்ததுதான் ரொம்ப நல்ல ப்ளான்.. மொத்த அணியும் பாசிட்டிவாக மாத்திட்டாரு.. தாறுமாறாக புகழந்த கோலி..!
- இந்த ‘ரெண்டு’ ஆப்கான் ப்ளேயர்ஸ்தான் ரொம்ப டேஞ்சர்.. மத்த டீம் மாதிரி இவங்கள சாதாரணமாக நினைச்சிடாதீங்க.. இந்தியாவை ‘அலெர்ட்’ பண்ணிய கவாஸ்கர்..!