‘தல’ என்ன சொன்னார்?.. ‘மேக்ஸ்வெல்லை ஏலம் கேட்கும்போது என்ன நடந்தது?’.. சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் புதிய வீரர்களை எடுத்தது குறித்து தோனி என்ன கூறினார்? என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமாக விளையாடி, முதல் முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் சென்னை அணி அப்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனை அடுத்து கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் போன்ற மூத்த வீரர்களை அணியிலிருந்து சிஎஸ்கே விடுவித்தது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று 14-வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை சென்னை அணி ரூ.7 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரவை சென்னை அணி ரூ.50 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் ஏலம் முடிந்த பின், சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஏலத்தில் வீரர்களை எடுத்தது குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது, வீரர்கள் தேர்வு குறித்து கேப்டன் தோனி என்ன கூறினார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘தல எப்போதுமே க்ளையர் (தெளிவு). அவர் என்ன வேண்டும் என்பதை சொல்லிடுவார், அதுக்கு ஆப்ஷன் கொடுத்திருவார். அதுக்குமேல் அவர் தலையிடமாட்டார்’ என பதிலளித்தார்.

மேக்ஸ்வெலை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது குறித்து பதிலளித்த காசி விஸ்வநாதன், ‘எவ்வளவு தூரம் வரைக்கும் போலாம்னுதான், 19 கோடிக்கும் ஏலம் எடுக்க முடியாதுல்ல’ என பதிலளித்தார். சென்னை அணி ஏலம் எடுக்க ரூ.19.90 கோடிதான் கையிருப்பு இருந்தது. அதனால் மேக்ஸ்வெல்லை பெங்களூரு அணி ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்