IPL 2022 : பரபரப்பாக சென்று கொண்டிருந்த மேட்ச்.. திடீரென இளம் காதல் ஜோடி செய்த காரியம்.. வைரல் சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிக்கு மத்தியில், இளம் காதல் ஜோடி செய்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

15 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யத்துடனும் நடைபெறும் வரும் நிலையில், நேற்று நடைபெற்றிருந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்தன.

இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இளம் காதல் ஜோடி

தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஐபிஎல் போட்டி ஒன்றின் மத்தியில், இளம் காதல் ஜோடிகள் செய்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

குஜராத் அணியின் இரண்டாவது வெற்றி

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்யவே, அதன்படி குஜராத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில், அவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக இளம் வீரர் சுப்மன் கில், 84 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அவர்களால் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் இரண்டாவது வெற்றியை அறிமுக ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பதிவு செய்துள்ளது.

காதல் ஜோடி செய்த காரியம்

இந்த போட்டிக்கு நடுவே தான், டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், போட்டியைக் காண வந்த காதல் ஜோடி ஒன்று, மாறி மாறி முத்தத்தினை பரிமாறிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாக தொடங்கவே, நெட்டிசன்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் பலரும், பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு மத்தியில், இளம் ஜோடியின் செயல்பாடு பற்றி பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

HARDIKPANDYA, RISHABHPANT, IPL, IPL 2022, GT VS DC, LOVERS, VIRAL, காதல் ஜோடி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்