'அவன் என்கிட்ட எதுவும் கேக்கலை... நானே தான்'- மயங்க் அகர்வாலை புகழும் கவாஸ்கர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்கை ஆரம்பித்து விளையாடி வருகிறது.

'அவன் என்கிட்ட எதுவும் கேக்கலை... நானே தான்'- மயங்க் அகர்வாலை புகழும் கவாஸ்கர்
Advertising
>
Advertising

இந்தியா சார்பில் தொடக்க வீரர்களில் ஒருவரான மயங்க் அகர்வால், அதிரடி சதம் விளாசி தொடர்ந்து களத்தில் இருக்கிறார். இதற்கு முன்னர் மயங்க் அகர்வால், பலமுறை நன்றாக பேட்டிங் ஆட ஆரம்பித்திருந்தாலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

what advice did Gavaskar shared with Mayank amidst test match

பலமுறை அரை சதம் கண்ட பின்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்துப் பரிதாபமாக வெளியேறினார் மயங்க். இப்படியான விமர்சனங்கள் அனைத்துக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அகர்வால். மயங்க்-ன் பேட்டிங் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவனான சுனில் கவாஸ்கர், மயங்க் அகர்வாலிடம் தான் கொடுத்த அட்வைஸ் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அது பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.

அவர், ‘மயங்க் என்னிடம் எந்த அறிவுரையும் கேட்கவில்லை. நானாக முன் வந்து அவரிடம் அட்வைஸ் கொடுத்தேன். நான் இந்திய கிரிக்கெட் பற்றி அக்கறை கொண்டுள்ளேன். அதனால் தான் அப்படிச் செய்தேன்.

முதல் டெஸ்ட்டின் போது நானும் மயங்க்-கும் ஒரே ஓட்டலில் தான் தங்கியிருந்தோம். அப்போது ஒரு முறை அவர் என்னைக் கடந்து நடந்து சென்றார். அந்த நேரத்தில் அவர் எப்படி ஆட்டத்தை அணுக வேண்டும் என்று விளக்கமாக எனது கருத்துகளைக் கூறினேன். இன்றைய ஆட்டம் மூலம் அவர் தனது மன உறுதியைக் காண்பித்துள்ளார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

CRICKET, MAYANK AGARWAL, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்