5 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - கடைசி நேரத்தில் போட்டியை ஒத்திவைத்த வெஸ்ட் இண்டீஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒரே அணியில் 5 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் இன்று நடைபெற இருந்த மேற்கு இந்தியத் தீவுகள் - அயர்லாந்து இடையேயான ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, அய்ரலாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொரோனா பாசிடிவ்

ஒவ்வொரு  போட்டி துவங்குவதற்கும் முன்பு, இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு முன்னர் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அயர்லாந்து அணி கேப்டன் ஆண்டி பால்பிர்னி, முக்கிய வீரர்கள் லோர்கேன் டக்கர், பயிற்சியாளர் டேவிட் ரிப்ளே ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டியின் போது அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவர்களை மட்டும் தனிமைப்படுத்திய பின்னர் அந்தப் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இன்று மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசிப்போட்டி.. மைதானத்துலயே கண்கலங்கிய ராஸ் டெய்லர் - பரவும் நெகிழ்ச்சி வீடியோ..!

 

ஒத்திவைக்கப்பட்ட போட்டி

அயர்லாந்து அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று இன்று உறுதியானதை அடுத்து இன்று நடைபெற இருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியான பிறகு மீண்டும் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறுமா?

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இந்த இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி நடைபெற இருக்கிறது. அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டு வருவதால் ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியான சிக்கலில் தவித்துவரும் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இது மேலும் தலைவலியை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ‘ஏலம்’ போன வீரர் திடீர் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

WEST INDIES, IRELAND, ODI, POSTPOND, PLAYERS, COVID19 POSTIVE, CORONA, கொரோனா, கொரோனா பாசிட்டிவ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்