10 கோடிக்கு மேல ஏலம் போன வீரர்.. உற்சாகத்துல ரூ.15,000-க்கு பீட்சா வாங்கி கொடுத்து ட்ரீட்.. ஐபிஎல் எப்படி எல்லாம் வேலை செய்யுது பையா

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை வரும் ஐபிஎல் லீக் தொடருக்கு சுமார் ரூ 10.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

Advertising
>
Advertising

அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. பட்டு சேலை அணிந்து பரிமாறும் ரோபோ.. வியக்கும் வாடிக்கையாளர்கள்

வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி:

கடந்த சில நாட்களுக்கு முன் வரும் 2022-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல எதிர்பாராத சம்பவங்களும், ரசிகர்களை சோகமாக்கும் சம்பவங்களும் பல நடந்துள்ளது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் பெரும்பான்மையோர் அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் ஒருகாலத்தில் ஸ்டார் வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா ஏலத்தில் போகாதது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்:

அதன் தொடர்ச்சியாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ 10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது. நிக்கோலஸ் பூரன், கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். நிக்கோலஸ் பூரன் 7.72 என்ற மோசமான சராசரியில் 85 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார், மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை இருந்தபோதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்ததுள்ளது.

பீட்சா விருந்து:

தற்போது, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  அணி கிரேடு ஒன் பயோ-பப்பில் இருப்பதால்,கடுமையான பாதுகாப்பு  கட்டுபாடுகளுக்கு உட்பட்டு உணவு பொருட்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும் என்பது விதி.

மேலும், ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கபட்டதால் மகிழ்ச்சியடைந்த நிக்கோலஸ் பூரன் ரூ 15,000 ஆயிரம் மதிப்பிலான 15 பீட்சாக்களை ஆர்டர் செய்து தனது வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு பயோ-பப்பிளுக்குள் பீட்சா விருந்து கொடுத்துள்ளதும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விமானத்துக்குள்ள ஆவி இருக்கா? யாருங்க என்கிட்ட 'க்ரீன் டீ' கேட்டது? மண்டையை பிச்சிக்கும் விமானப் பணிப்பெண்

WEST INDIES PLAYER, IPL AUCTION, வெஸ்ட் இண்டீஸ் வீரர், நிக்கோலஸ், பீட்சா விருந்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்