‘60 வருடம், 7000 விக்கெட்’.. பிரமிக்க வைத்த 85 வயது கிரிக்கெட் வீரர்..! யார் இவர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு60 வருடமாக கிரிக்கெட் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செசில் ரைட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட். அந்நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவான்களான விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் விளையாடியுள்ளார். கடந்த 1959 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற லான்கா ஷையர் லீக் போட்டியில் விளையாட சென்றவர், அங்கேயே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர ஆரம்பித்தார்.
அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 7000 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 85 வயதான செசில் கேரி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், ‘இவ்வளவு நாள் நான் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம், காயம் இல்லாமல் உடலை சரியாக கவனித்துக்கொண்டதுதான். உணவுவைப் பொறுத்தவரை எதையும் சாப்பிடுவேன். அதிகமாக மது குடிக்க மாட்டேன், எப்போதாவது பீர் மட்டும் குடிப்பேன். உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததேயில்லை. டிவி முன் அமர்ந்தது இல்லை’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இவர மாதிரி ஒருத்தரை இந்தியா உருவாக்கும்னு நெனக்கவே இல்ல’.. பிரபல இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய விண்டீஸ் ஜாம்பவான்..!
- ‘புது இடம், புது டீம்’.. அடுத்த இன்னிங்ஸ்ஸிக்கு ரெடியான சிஎஸ்கே ப்ளேயர்..!
- ‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..!
- ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்’.. முதல் இடத்தை பிடித்த அணி எது..?
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!
- ‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
- ‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!
- இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!