“புதிய அவதாரம் எடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன்”!... விண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு முக்கிய பொறுப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு அந்த அணியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில், விண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மற்றும் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக அந்த அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று (06/05/2019) இரவு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுபற்றி கெய்ல் கூறும்போது, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எப்போதும் எனக்கு பெருமை. மேலும், இது எனக்கு 5 வது உலக கோப்பை இந்த தொடர் எனக்கு ஸ்பெஷலானது. இந்நிலையில், அணியின் மூத்த வீரராக, கேப்டன் உள்ளிட்ட வீரர்களுக்கு உதவும் முக்கிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'?... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்?
- 'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்!
- “தலதான் தலைசிறந்த கேப்டன்”!.... புகழ்ந்து தள்ளும் பிரபல வீரர்!
- ‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!
- 'அந்த வலி சாதாரணமானது இல்ல'...அது எனக்கு மட்டும் தான் தெரியும்...'பிரபல வீரர்' உருக்கம்!
- ஏன் உலகக் கோப்பைக்கு ‘தல’தோனி வேணும்?.. ‘ஹிட்மேன்’ கூறிய அசத்தலான காரணங்கள்!
- ‘கோலிக்கு அடுத்து, அந்த இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் யாரு தெரியுமா?’.. பிரபல வீரர் அதிரடி!
- ‘பிரபல கிரிக்கெட் வீரர் செய்த விபரீத செயல்’.. பறிபோன உலகக் கோப்பை வாய்ப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ஐ.பி.எல். போட்டி நடுவே நாடு திரும்பும் வீரர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
- ஐபிஎல் நட்சத்திர பேட்ஸ்மேன் மிஸ்ஸிங்..! வெளியான உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியல்!