‘காசு வாங்காமகூட விளையாடுறோம்’.. ‘மறுபடியும் விளையாட விடுங்க’.. உருகும் மூத்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருந்ததாக கூறி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்தது. இது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் இருவர் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கப்படுள்ளதால் ஐசிசியிடம் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கான ஜிம்பாப்வே வீரர்களின் சம்பளமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவது குறித்து ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் ஒருவர் ‘பணம் வாங்காமகூட விளையாடுகிறோம். எங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுங்கள்’ என உருக்கமாக கூறியதாக ESPNcricinfo பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICC, ZIMBABWE, CRICKETER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்