டி20 கேப்டனாக முதல் போட்டி.. டாஸ் ஜெயிச்சதும் ‘ரோஹித்’ சொன்ன வார்த்தை.. அப்போ இனிமேல்தான் ‘வெறித்தனமான’ சம்பவம் இருக்குபோல..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வெற்றி பெற்றதும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறிய பதில் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி இன்று (17.11.2021) ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மேன் 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று ரோஹித் ஷர்மா சந்திக்கும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது பேசிய ரோஹித் ஷர்மா, ‘நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இரண்டாவது இன்னிங்ஸின் போது பனியின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது. டி20 உலகக்கோப்பை முடிந்து இந்தியா வந்ததும் இரண்டு நாட்கள் மட்டுமே பயிற்சி செய்ய முடிந்தது.

ஆனாலும் நன்றாக பயிற்சியை மேற்கொண்டுள்ளோம். வெங்கடேஷ் ஐயர் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார். அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து விளையாட உள்ளோம்’ என கூறினார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியது. அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சுழலில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றதும், டி20 உலகக்கோப்பையை மனதில் விளையாட உள்ளதாக ரோஹித் ஷர்மா கூறியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ROHITSHARMA, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்