"முதல் தடவை அவருக்கு ஒரு பைக் கொடுத்தோம்.. அவ்வளவுதான்.. எங்க போனாருன்னே தெர்ல".. தோனி குறித்து நெகிழ்ந்து பேசிய CSK உரிமையாளர் ஸ்ரீனிவாசன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | பனி லிங்க தரிசனம்.. பரவசமடைந்த பக்தர்கள்.. 2 வருடம் கழித்து கோலாகலமாக துவங்கிய அமர்நாத் யாத்திரை..!

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இடையில் ரவீந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கினாலும் அவர், மீண்டும் தோனியிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்.

தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே முதலில் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது மஹேந்திர சிங் தோனியின் முகம் தான். வெற்றியிலும் தோல்வியிலும் சகஜமாக களமாடும் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்துவரும் நிலையில், சென்னை அணிக்கு அவர் கேப்டனானதும் தமிழக மக்கள் கொண்டாட துவங்கினர். தமிழக மக்கள் அவரை 'தல' என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல்முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றபோது, 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தோனியை ஏலத்தில் எடுத்தது சென்னை அணி நிர்வாகம். அன்று துவங்கிய பயணம் இந்நேரம் வரையில் முடியவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவதை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் நடைபெறும் பயிற்சிகளின் போதும் கூட தோனியை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்திற்கு வருவதுண்டு. அந்த வகையில் சென்னைக்கும் தொனிக்கும் இடையில் ஒரு வலுவான பிணைப்பு இருக்கிறது. இதனை தோனியே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

பைக் காதலர்

பொதுவாக பைக்குகள் மீது தோனிக்கு ஆர்வம் அதிகம். தனது வீட்டில் பல பைக்குகளை பராமரித்துவரும் அவர், சென்னை முழுவதும் பைக்கில் வலம் வந்திருக்கிறார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அப்போது," அவருக்கு பைக் என்றால் பிடிக்கும். ஆகவே முதன்முறையாக அவருக்கு பைக் ஒன்றை கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் அவர் மறைந்துவிட்டார். அவர் சென்னையின் ஒவ்வொரு சாலையிலும் பயணித்தார். இதுவே அவரை மக்களுக்கு பிடித்துப்போக காரணமாகவும் இருந்தது. அவர் இந்த நகரத்தை நேசிக்கிறார். இதன் வழியாகவே அவர் மக்களை சென்றடைந்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | மொபைல் போன், லேப்டாப்'ல இருந்த ஆபாச வீடியோக்கள்.. நாகர்கோவில் காசி வழக்கில்.. அதிர வைத்த சிபிசிஐடி ரிப்போர்ட்..

CRICKET, DHONI, MS DHONI, CSK OWNER, CHENNAI SUPER KINGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்