மகளிர் உலக கோப்பை : "இப்படி ஒரு தப்பு நடந்தும் யாரும் கவனிக்கலயே.." அம்பையரின் கவனக்குறைவு.. ஒரே ஒரு பந்தால் வந்த 'வினை'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, தற்போது நியூசிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

பல போட்டிகள், மிகவும் விறுவிறுப்பாகவும், இறுதி கட்டம் வரை வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க முடியாத வகையிலும் சென்று கொண்டிருக்கிறது.

இதில், மிதாலி தலைமையிலான இந்திய மகளிர் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. தங்களின் அடுத்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

தொடர் தோல்வி

அதே போல, பிஸ்மா மஃரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் விளையாடி, மூன்றிலும் தோல்வி கண்டு, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக, தங்களின் மூன்றாவது போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டிருந்தது.

வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

இதில், முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 217 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அம்பையரின் கவனக்குறைவு

இதனிடையே, இந்த போட்டியின் போது, நடந்த தவறுதல் ஒன்று குறித்து, கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நடுவருடைய கவனக்குறைவின் காரணமாக தான் இந்த தவறும் நடந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 27 ஆவது ஓவரை பாகிஸ்தானின் ஒமைமா சொஹைல் வீசினார்.

நடுவில் வந்த டிஆர்எஸ்

ஓவரின் கடைசி பந்தில், தென்னாப்பிரிக்க வீராங்கனைக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால், அவர்கள் டிஆர்எஸ் ரிவியூ செய்ய தென்னாப்பிரிக்க வீராங்கனை அவுட்டில்லை என முடிவுகள் வந்தது. தொடர்ந்து, ஆறு பந்துகளை ஒமைமா வீசி முடித்திருந்தாலும், டிஆர்எஸ் நடுவில் வந்ததால், நடுவர் பந்தின் கணக்கைத் தவற விட்டு விட்டார் என தெரிகிறது.

ரசிகர்கள் கருத்து

இதன் காரணமாக, ஒமைமா ஒரு பந்து அதிகமாக, அதாவது 7 ஆவது பந்தினை வீசியுள்ளார். ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில், நோ பால் மற்றும் வைடு என எதையும் போடாமல் இருந்த பிறகும், 7 பந்துகள் வீசிய வீராங்கனை பற்றி, கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவமும் கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WC 2022, OMAIMA SOHAIL, PAK VS SA

மற்ற செய்திகள்