'என் சிறப்பான ஆட்டத்துக்கு தல தான் காரணம்'... நெகிழும் பிரபல சென்னை வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் களமிறங்கினர். இதில் டுப்ளிஸிஸ் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் ஹைதராபாத் அணி பவுலர்களின் பந்து வீச்சை  நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் அதிரடியாக ஆடிய வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். இதனால் சென்னை அணி 19.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் நடப்பு ஐபிஎல் தொடரில் வாட்சன் 10 போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய போட்டியில் அவர் 96 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

பின்னர் பேசிய வாட்சன், 'நான் சில போட்டியில் சிறப்பாக விளையாடாதது எனக்கே புரிந்தது. எனினும் மற்ற அணியில் இருந்திருந்தால் என்னை அணியில் இருந்து நீக்கியிருப்பார்கள். ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். அதனால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். மேலும் என் மீது நம்பிக்கை வைத்த இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்