VIDEO: ‘என்னது நிலாவா..?’.. சார் கொஞ்சம் நல்லா பாருங்க.. விழுந்து விழுந்து சிரித்த வர்ணனையாளர்கள்.. டி20 உலகக்கோப்பை போட்டியில் நடந்த ருசிகரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை போட்டியின்போது வர்ணனையாளரால் சிரிப்பலை ஏற்பட்டது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 26-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆதில் ரஷித் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 11.4 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 71 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இந்த நிலையில், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் (Shane Watson) வர்ணனையாளராக செயல்பட்டார். அப்போது போட்டிக்கு நடுவே இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், தொடர்ந்து சிக்சர்களை விளாசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் அடித்த சிக்சர் ஒன்று பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்த தடுப்பில் பட்டு மைதானத்தில் விழுந்தது.

உடனே தரையில் கிடந்த பந்தை கேமராமேன் சிறிது நேரம் காண்பித்துக் கொண்டிருந்தார். இதை திடீரென பார்த்த ஷேன் வாட்சன், பந்தை நிலவு என எண்ணி வர்ணனை செய்தார். இதைக் கேட்ட சக வர்ணனையாளர்கள் அது பந்து எனக் கூறி விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATSON, ENGVAUS, T20WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்