அவரை பார்த்தாலே 'பயமா' இருக்கும்... 'ரெண்டு' பேருக்கு நடுவுல என்ன பிரச்சினை... வெளிப்படையாக பேசிய கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் கேப்டனும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் இந்த முறை அணியை கட்டாயம் பிளே ஆப் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். முதல் போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததால் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இயான் மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று விட்டது. இதனால் அவரே அணியின் கேப்டனாக தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சக அணி வீரரும் ஆல் ரவுண்டருமான ஆண்ட்ரே ரஸ்ஸல் குறித்து தினேஷ் கார்த்திக் மனந்திறந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அஸ்வினிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ''ரஸ்ஸல் பேட்டிங் செய்ய வருவதை பார்த்தாலே அச்சமாக இருக்கும். அவரை பார்க்கவே மல்யுத்த வீரர் போல இருக்கும். ரஸ்ஸல் நடந்து வருவதை பார்த்தே பலர் பயந்து இருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். ஒரு மாதிரி தோரணை கொண்டவர் என்றாலும் அவர் மிகவும் நல்ல குணம் கொண்டவர். பார்க்க பெரிய ஆள் போல இருந்தாலும் சிறிய விஷயங்களுக்கும் அவர் பயப்படுவார். குறிப்பாக காரில் வேகமாக போனால் அவர் பயப்படுவார்,'' என தெரிவித்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் இருவருக்கும் மோதல்கள் எழுந்ததாக செய்திகள் வெளியானது. தனக்கு பேட்டிங்கில் டாப் ஆர்டர் கொடுக்க மறுப்பதாக ரஸ்ஸல், தினேஷ் மீது குற்றஞ்சாட்டி இருந்தார். இவை அனைத்திற்கும் பதிலடி கொடுப்பது போல தற்போது தினேஷ் வெளிப்படையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்