ஒரே ஒரு சிக்ஸர்தான் மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்..! வைரலாகும் யுவராஜ் சிங் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கனடாவில் நடைபெற்று  வரும் டி20 தொடரில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் டி20 தொடரைப் போலவே கனடாவில் குளோபல் டி20 என்னும் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இத்தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இந்த அணியை கேப்டனாக யுவராஜ் சிங் வழி நடத்துகிறார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் மற்றும் டுபிளிசிஸ் தலைமையிலான எட்மோன்டோன் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ப்ராம்டன் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த எட்மோன்டோன் அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 191 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டொரண்டோ நேஷனல்ஸ் அணி 17.5 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கிளாசன் 45 ரன்களும், யுவராஜ் சிங் 35 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் சதாப் கான் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ப்ளாட் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதனை சதாப் வியந்து பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

GLT20, GLOBALT20CANADA, YUVRAJSINGH, TORONTONATIONAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்