VIDEO: ‘என்ன வான்டடா போய் வம்பிழுக்கிறாரு’.. இங்கிலாந்து வீரருடன் மோதல்.. சிராஜ் ரொம்ப ‘டேஞ்சர்’ போலயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனை இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வம்பிழுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ரோஹித் ஷர்மா 36 ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய புஜாரா 4 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகியும் அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து களமிறங்கிய ரஹானே 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 6-வதாக வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 25 ரன்கள் எடுக்க, அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா 56 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 278 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கும், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கும் மோதல் ஏற்பட்டது. போட்டியின் கடைசி கட்டத்தில் முகமது சிராஜும், பும்ராவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது 86-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். அந்த சமயம் சிராஜை பார்த்து ஆண்டர்சன் கோபமாக ஏதோ சொல்ல, உடனே அவரை மோதுவதுபோல சிராஜ் அருகில் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்