உண்மையாவா? அது எனக்கா?.. ஆச்சரியப்பட்ட வில்லியம்சன்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்தபின் ‘ப்ளேயர் ஆஃப் தி சீரிஸ்’ விருது குறித்த அறிவிப்பை கேட்டு ஆச்சரியமாகிய வில்லியம்சனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
12 -வது சீசன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்று பலவருட கனவை நிறைவேற்றியுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடரில் 1979, 1987 மற்றும் 1992 ஆகிய மூன்று ஆண்டுகளில் இறுதிப்போட்டிவரை சென்று தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நியூஸிலாந்து அணியும் ஒருமுறைகூட உலகக்கோப்பை வென்றதில்லை. முன்னதாக 2015 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் இந்த வருடம் நியூஸிலாந்து அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் தவறவிட்டது.
ஆனாலும் நியூஸிலாந்து கேப்டன் கேன்வில்லியம்சன் இறுதிப்போட்டியில் விளையாடி 30 ரன்கள் எடுத்ததன்மூலம், உலகக்கோப்பையில் அதிகரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். மேலும் அவருக்கு ப்ளேயர் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டது. அப்போது இந்த அறிவிப்பை கேட்டு வில்லியம்சன் ‘இந்த விருது எனக்கா?’ என்பதுபோல கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது வெட்கக்கேடானது’ என வருந்திய கேப்டன்.. மன்னிப்பு கேட்ட பிரபல வீரர்..
- ‘கடைசி வரை போராடி தோல்வி’.. டுவிட்டரில் உருக்கமான பதிவிட்ட நியூஸிலாந்து வீரர்..!
- 'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ!
- 'உலகக்கோப்பை' இறுதி போட்டியில் நிகழ்ந்த களேபரம்'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
- 'இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல்'... 'விளாசிய முன்னாள் நட்சத்திர வீரர்'!
- ‘சூப்பர் ஓவர்’ சமனில் முடிந்தும் வெற்றி பெற்ற இங்கிலாந்து..! பைனில் நடந்த த்ரில் சம்பவம்..!
- முக்கிய விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றிய பெர்க்குசன்..! வைரலாகும் வீடியோ..!
- ‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.!
- ‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி?
- ‘அவர்தான் கேப்டனாகனும்’... ‘இந்திய அணியின் முன்னாள் வீரர் ட்வீட்'!