‘ஒரு ப்ளேயரை இப்டியா பண்றது’.. சர்ச்சையை கிளப்பிய ரசிகர்களின் செயல்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் விளையாட 1 வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடை காலம் முடிவடைந்ததால் மீண்டும் இருவரும் அணிக்கு திரும்பினர்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வார்னர் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அப்போது வார்னர் மைதானத்தில் இருந்து வெளியே செல்லும்போது, பந்தை சேதப்படுத்தியதை நினைவு படுத்தும் விதமாக சாண்ட்பேப்பரை (Sandpaper) தூக்கிக் காட்டி ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் அடித்து அசத்தினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கால்பந்தைப் போல டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றம்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி..!
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’
- உண்மையிலே 'ஹார்ட் மெல்டிங்' தருணம்னா.. அது இதான்'.. ஒரு நொடியில் நெகிழ வைத்த சம்பவம்!
- ‘ஆஷஸ் தொடரில் முதல் முறையாக நிகழ்ந்த அதிசயம்’... ‘அதிரடி மாற்றம் கொண்டுவந்த ஐசிசி’!
- மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
- ராணுவம் செல்லும் தோனியை கிண்டலடித்த பிரபல முன்னாள் வீரர்..! கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!
- 'பைனல்'ல இது தான் நடந்துச்சு'... 'ஆனா அதுக்காக 'துக்கப்படல, துயரப்படல'... சஸ்பென்ஸ் உடைத்த நடுவர்!
- Top 4: 'செமி ஃபைனலுக்கு போகப்போறது இந்த 4 டீம்தான்... ஆனா' ... சூடு பிடிக்கும் உலகக்கோப்பை களம்!
- 'ஷாப்பிங்' மாலில் 'துரத்தி துரத்தி'... பிரபல வீரரிடம் 'ரசிகரின் இழிவான' செயல் ... வைரலாகும் வீடியோ!
- 'என்னா பௌலிங்! ஸ்டம்புகளை காலிசெய்த பந்துவீச்சு'... 'இங்கிலாந்தில் கெத்துகாட்டிய இந்திய வீரர்'!