‘முக்கியமான விக்கெட்டை எடுத்தா இப்டிதான் பண்ணுவாரோ’.. வைரலாகும் விராட் கோலியின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டான்ஸ் ஆடி விக்கெட்டை கொண்டாடிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். இப்போட்டியின் முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்தே மார்டின் கப்திலின் காலில் பட்டு சென்றது. இதனால் இந்திய அணி அம்பயரிடன் அவுட் கோரினர். ஆனால் அம்பயர் அவுட் இல்லை மறுத்துவிட்டார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்ட் அம்பயரிடம் ரி-வியூ கோரினார். அப்போது பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகி சென்றதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனாலும் 4 -வது ஓவரில் கப்திலை 1 ரன்னில் அவுட்டாக்கி இந்திய அணி அசத்தியது.

இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். இதில் நிக்கோல்ஸ் 28 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜாவின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக விராட் கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, RAVINDRA JADEJA, TEAMINDIA, CWC19, INDVNZ, SEMIFINALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்