‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளரை விராட் கோலி இடித்துவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா (9), விராட் கோலி (9) உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 16.5 ஓவர்களில் 140 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா சமன் செய்தது. இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் 79 ரன்கள் அடித்து அசத்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் ரன் எடுக்க ஓடும்போது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸ்ஸின் தோள்பட்டையில் விராட் கோலி லேசாக இடித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாலாவதா' அவரை எறங்க சொன்னேன்...ஆனா 'இவரு' வந்துட்டாரு!
- ‘தோனியின் மாஸ் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா’.. ‘கோலி கூட இன்னும் அத பண்ணல’ அது என்ன தெரியுமா..?
- ‘4 மணிநேரம் லேட்’ ‘இந்தியாவுக்கு போகுற ப்ளைட்ட மிஸ் பண்ண போறேன்’.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல வீரரின் ட்வீட்..!
- ‘ராணுவத்தில் இருக்கும்போது மனைவி சொன்னது’.. நிறைவேற்றிய ‘தல’ தோனி..! வைரல் போட்டோ..!
- ‘அவங்க 2 பேரால தான்’.. ‘இவரு இந்த நிலமைல இருக்காரு’.. ‘விராட் கோலியை சீண்டியுள்ள பிரபல வீரர்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘12 வருஷமா விளையாடாம இருந்தாரு’.. திடீர் ஓய்வை அறிவித்த இந்திய ஆல்ரவுண்டர்..!
- Viral Video:'கோவத்தில்' ஸ்டெம்பை உடைத்த 'கோலி'..ஏன்?..என்ன ஆச்சு?
- 'ஹிட்மேன்' கிட்ட மோதுறதே வேலையா போச்சு.. ஒரே போட்டியில் 2 வேர்ல்டு 'ரெக்கார்டுகள்' உடைப்பு!
- ‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..!