கை பட்டதா? இல்ல பந்து பட்டதா?.. அவுட்டா? அவுட் இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன அம்பயர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து 183 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 52 -வது போட்டி இன்று(03.05.2019) மொகாலியில் நடைபெறுகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 2 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 14 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த மய்னங் அகர்வால்(36) மற்றும் நிகோலஸ் பூரான்(55) கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. இதில் மய்னங் அகர்வால் 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கடைசியாக களமிறங்கிய சாம் குர்ரன் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடுவில்  6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

IPL, IPL2019, KXIPVKKR, KKRHAITAIYAAR, VIVOIPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்