ஸ்கெட்ச் அம்பயருக்கா? இல்ல சிக்ஸருக்கா? .. கடைசி ஓவரில் தோனி அடித்த வைரல் ஷாட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 352 ரன்களை குவித்தது. இதில் ஷிகர் தவான்(117) சதம் மற்றும் விராட் கோலி(82) ரோஹித் ஷர்மா(57) இருவரும் அரைசதத்தை விளாசினர்.

இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் திணறியது. இதில் டேவிட் வார்னர்(56), ஷ்டீவ் ஸ்மித்(69) மற்றும் அலெக்ஸ் கேரி(55) ஆகிய மூவரும் அரைசதங்களை கடந்தனர். ஆனாலும் 50 ஓவர்களின் முடிவில் 316 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் 5 -வதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனி 14 பந்துகளில் 27 ரன்கள்(3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய 50 -வது ஓவரில் தோனி அடித்த ஷாட் ஒன்று அம்பயரை நோக்கி சென்றது. உடனே ஸ்டோனிஸ் கேட்ச் பிடித்து தோனியை அவுட் செய்தார். அதனைத் தொடர்ந்து அதே ஓவரில் விராட் கோலியும் அவுட்டாகினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்