‘கடைசி ஓவரில் நடந்த சிறப்பான, தரமான சம்பவம்’.. ‘தோனி கொடுத்த டிப்ஸ்’.. ‘ஷமி படைத்த உலகசாதனை’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

12 -வது உலகக்கோப்பை தொடரின் 28 -வது லீக் போட்டி நேற்று சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே நடந்த இப்போட்டியில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பையில் 4 -வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. இருந்தாலும் விராட் கோலி 67 ரன்கள் மற்றும் கேதர் ஜாதவ் 52 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். இப்போட்டியில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிக பந்துகளை வீணாக்கியதாக பலரும் சமூகவலைதளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான், நிதானமாக விளையாடி 213 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் கடைசி ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தோனியிடம் நடத்திய ஆலோசனைப் பிறகு வீசிய அடுத்தடுத்த பந்துகளில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக்கோப்பையில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

ICCWORLDCUP2019, MSDHONI, VIRATKOHLI, INDVAFG, TEAMINDIA, SHAMI, HATRICK, VIRALVIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்