‘21 வருஷத்துக்கு அப்றம் இப்டி நடந்திருக்கு’.. ஸ்டெம்பில் பட்டும் ‘நாட் அவுட்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் எதிர்பாரத விதமாக பேட்டை ஸ்டெம்பில் தட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று கௌண்டி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் கோப் 96 ரன்களும், ஈவின் லெவிஸ் 70 ரன்களும், ஹெட்மெய்ர் 50 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 124 ரன்களும், லிண்டன் தாஸ் 94 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் 49 -வது ஓவரை வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் வீசினார். அந்த ஓவரின் 5 -வது பந்தை மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒசேன் தாமஸ் எதிர்கொண்டார். அப்போது பந்தை அடிக்க முயன்று தாமஸ் தவறவிட அது விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதில் எதிர்பாரதவிதமாக தாமஸின் பேட் ஸ்டெம்பில் பட்டு பெய்ல் கீழே விழுந்தது. இதனை வங்கதேச வீரர்கள்  அவுட் என நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் தாமஸ் பந்தை அடிக்க முயற்சி செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் போது தவறுதலாக பேட் ஸ்டெம்பில் பட்டதால் ‘நாட் அவுட்’ என நடுவர்கள் அறிவித்தனர். இதேபோன்று கடந்த 1998 -ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக்கிற்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்