‘யாரென்று புரிகிறதா’.. ஓவல் மைதானத்தை அதிரவைத்த ‘தல’தோனியின் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் ஆரவாரமாக உற்சாகப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களான ஷிகர் தவான்(117) சதம் மற்றும் ரோஹித் ஷர்மா(57) அரைசதம் அடுத்து அசத்தினர். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா அரைசதத்தைக் கடந்ததன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்தபடியாக 2000 ரன்களை(37 போட்டிகளில்) கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்த்திக் பாண்ட்யா கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் 48 ரன்கள் அடித்திருந்த போது ஹர்திக் பாண்ட்யா அவுட்டாகினார். இதனை அடுத்து கேல்.எல்.ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தோனி களமிறங்கினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். இதில் தோனி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 27 ரன்களில் அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து 82 ரன்களில் விராட் கோலி அவுட்டாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்களை இந்தியா எடுத்தது. இதனைத் தொடர்ந்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஸ்டெம்பில் பட்டுத் தெறித்த பந்து'.. ஆனால் அடுத்த நொடியில் காத்திருந்த ஆச்சர்யம்.. வைரல் வீடியோ!
- 'தோனியின் கையுறை காண்ட்ரோவர்ஸியின் முடிவு இன்று தெரியும்'.. மனம் திறந்த இந்திய வீரர்!
- 'என்னா அடி??'.. காட்டுப்பய சார் இந்த வார்னர்.. மைதானத்திலேயே சுருண்ட வீரர்!
- ‘வைரலாகும் இங்கிலாந்து வீரரின் சதமடிக்கும் வீடியோ..’ ஆனாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க வேணாம்..
- ‘இந்திய வீரர்களுக்கு அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட்..’ உலகக் கோப்பையில் நெகிழ்ச்சி மொமென்ட்..
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல'...'தோனி'க்கு எதிராக...திட்டம் போட்ட 'பாகிஸ்தான்'... பரபரப்பு தகவல்!
- 'தோனி வீட்டு கதவை உடைத்து திருட்டு'... 'விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பல்'!
- இந்தியாவுக்கு எதிரானப் போட்டி... 'திட்டம் தீட்டிய பாகிஸ்தான் கேப்டன்'.. 'விளாசிதள்ளிய முன்னாள் பிரபல வீரர்'!
- காயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்..! மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘நீங்களே இப்படி பண்ணலாமா..?’ விராட் கோலிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்..