‘கொஞ்சம் இருங்க தம்பி, மொதல்ல அங்க பாருங்க’.. பங்களாதேஷ் வீரரை அலெர்ட் பண்ண ‘தல’யின் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமைதானத்தில் வங்கதேச வீரரின் ஃபீல்டிங்கை தோனி சரிசெய்ய சொல்லிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தயா-வங்கதேசம் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் தோனி ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதேபோல் பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் 5 ஓவர்களை வீசிய புவனேஸ்வர்குமார் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வங்கதேச பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இப்போட்டியில் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது வங்கதேச வீரர்களின் ஃபீல்டிங்கை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் இன்னிங்ஸின் 40 -வது ஓவரின் போது வங்கதேச வீரர் ஒருவர் தவறான இடத்தில் நின்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். இதனை கவணித்த தோனி பந்துவீச வந்த வங்கதேச வீரரை நிறுத்தி ஃபீல்டிங் தவறை சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து அந்த வீரர் சரியான இடத்துக்கு சென்றார். தோனியை ஃபீல்டிங்கில் கூட யாரும் ஏமாற்ற முடியாது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி நடக்கும்ணு யாரும் நெனச்சிருக்க மாட்டீங்க’.. தோனி, ராகுல் ருத்ரதாண்டவம்! மிரண்டு போன வங்கதேசம்!
- ‘தோனிக்கு மட்டும்தான் அது தெரியும்’.. அத எப்போ பண்ணனும்னு அவருதான் சொல்லணும்’
- ‘நல்லா கேட்டு கோங்க இப்டிதான் பந்துவீசனும்! பவுலிங் ரகசியத்தை சொல்லிக்கொடுத்த மலிங்கா’.. வைரல் வீடியோ!
- ‘இது ஒன்னு போதும் இந்தியா தான் உலகக் கோப்பைல..’ பிரபல முன்னாள் வீரர் நம்பிக்கை..
- 'பேப்பர்ல இல்லாம இருக்கலாம், ஆனா க்ரவுண்ட்ல கோலிக்கே ‘தல’தான் கேப்டன்'..! புகழ்ந்து தள்ளிய சி.எஸ்.கே.வின் செல்லப்பிள்ளை!
- 'சாதாரணமா நினைக்காதீங்க'... அப்புறமா 'சோலிய முடிச்சு விட்டுட்டு போய்டுவாங்க' !
- மீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..! வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!
- ‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்!
- ‘என்னது இது உண்மையா..?’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..
- ‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்!