பரபரப்பான கடைசி ஓவர், பறந்த பேட், பும்ராவால் அவுட்டில் இருந்து தப்பிய ‘தல’ தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி மற்றும் அம்பட்டி ராயுடுவின் நிதானமான ஆட்டத்தால் சென்னை அணி 131 ரன்களை எடுத்துள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் லீக்கின் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தகுதிசுற்று 1 இன்று(07.05.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். 65 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதில் அம்பட்டி ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
இப்போட்டியின் பும்ரா வீசிய 19 -வது ஓவரின் முதல் பந்தில் தோனி கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அது நோ பால் என கொடுக்கப்பட்டதால் தோனி அவுட்டில் இருந்து தப்பினார். ஆனாலும் அந்த ஓவரில் பும்ரா 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மற்ற செய்திகள்
காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஸிவா குட்டிய கடத்தப் போறேன், ஜாக்கிரதைனு தோனிகிட்ட சொன்னேன்’.. வைரல் ட்வீட்!
- ‘கோவத்துல குறுக்க இருந்த கதவ மறந்துட்டனே’.. வாக்குவாதம் செய்த அம்பயருக்கு வந்த சோதனை!
- ‘ப்ளீஸ் யாராவது ‘தல’தோனிக்கு ஹெல்ப் பண்ணுங்கப்பா’.. ஐஐடி மெட்ராஸ் செமஸ்டரில் சிஎஸ்கே குறித்து கேட்ட வைரல் கேள்வி!
- ’இந்தமுறை செமயா விளையாண்டிருக்கேன்.. ஆனா என் மகளோ’.. ரோஹித்தின் வைரல் கமெண்ட்!
- நம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல.. வேற லெவல் கேட்ச் பிடித்து அசத்திய தினேஷ் கார்த்திக்!
- 'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ!
- 'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'?... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்?
- ‘ஃபீல்டிங்கின் போது பலத்த காயமடைந்த சிஎஸ்கேவின் அதிரடி பேட்ஸ்மேன்’.. ப்ளே ஆஃப்பில் விளையாடுவது சந்தேகம்!
- ‘ரசலின் சாதனையை ஒரே பந்தில் தகர்தெறிந்த மலிங்கா’..ப்ளே ஆஃப் வாய்ப்பை கைப்பற்ற போராடும் கொல்கத்தா!
- என்னய்யா இது..! எதுக்கு கெய்ல் காலை புடிச்சாரு தீபக் ஷகர்?.. வைரலாகும் வீடியோ!