‘ப்ளீஸ் அவர அப்டி சொல்லாதீங்க’.. ஜென்டில்மேன் கேம்னு நிரூபிச்சிடீங்க கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய வீரர் ஷ்டீவ் ஸ்மித்தை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட ரசிகர்களுக்கு விராட் கோலி அன்பு கட்டளையிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலகக்கோப்பைப் போட்டி இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும் மற்றும் ரோஹித் ஷர்மா 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 56 ரன்களும், ஸ்மித் 69 ரன்களும் மற்றும் அலெக்ஸ் கேரி 55 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா மற்றும் புவெனேஷ்வர்குமார் தலா 3 விக்கெட்டுகளும், சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஷ்டீவ் ஸ்மித் பவுண்டரி லைனில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை பார்த்து ‘சீட்டர்..சீட்டர்’ என காத்த ஆரம்பித்தனர். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனடியாக ரசிகர்களிடம் இதுபோன்று செய்ய கூடாது என சைகயில் அன்பு கட்டளையிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு, பலரும் விராட் கோலியை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, INDVAUS, STEVESMITH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்