ரிஷப் பந்த் அவுட்டானதும் பயிற்சியாளரிடம் கோலி என்ன பேசினார்? வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர்களின் ஷாட் தேர்வு குறித்து விராட் கோலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

12 -வது சீசன் உலகக்கோப்பையில் லீக் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இதில் 4 -வது ஆர்டரில் இறங்கிய ரிஷப் பந்த் சில பவுண்டரிகளை விளாசி ஆறுதல் அளித்தார். அப்போது ரிஷப் பந்த் அவுட்டானதும் விராட் கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியிடம் ஏதோ பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தெரிவித்த விராட் கோலி,‘இக்கட்டான நேரத்தில் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. ரிஷப் பந்த் ஒரு இளம்வீரர். நானும் சிறுவயதில் பேட்டிங்கில் நிறைய தவறுகளை செய்துள்ளேன். அவரும் நிச்சயம் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வார். இந்த ஷாட் இல்லாமல் வேறு ஷாட் ஆடி இருக்கலாம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். அவரது சில ஷாட்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் அப்போது இதுதொடர்பாக ஏதும் விவாதிக்கவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

ICCWORLDCUP2019, VIRATKOHLI, RISHABHPANT, TEAMINDIA, RAVI SHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்