‘இவ்ளோ கஷ்டப்பட்டும் வேஸ்ட் ஆகிடுச்சே போல்ட்’.. ஸ்டெம்பில் பந்து பட்டும் அவுட் ஆகாத இலங்கை கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்துள்ளது.
உலகக்கோப்பை லீக் சுற்றின் மூன்றாவது போட்டி இன்று காட்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதல் அதிகபட்சமாக இலங்கை அணியின் கேப்டன் திமுத் குருனாத்தே 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 16.1 ஓவர்களின் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 137 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் மார்டின் குப்தில் 73 ரன்களும், கொலின் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 -வது ஓவரை நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் வீசினார். அப்போது அந்த ஓவரின் 4 -வது பந்தை வீசிய போது பந்து ஸ்டெம்பில் பட்டும் பெய்ல் கீழே விழவில்லை. இதனால் பேட்டிங் செய்த இலங்கை கேப்டன் திமுத் குருனாத்தே அவுட்டில் இருந்து தப்பினார். இதுபோல் நடப்பது உலகக்கோப்பைத் தொடரில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கிற்கு இதேபோல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மோசமான சாதனையைப் பதிவு செய்த பாகிஸ்தான்..’ மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வி..
- ‘புதிய உலக சாதனை படைத்த கிறிஸ் கெயில்..’ பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி..
- ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அபார வெற்றி..’ உணவு இடைவேளைக்கு முன்பே முடிந்த ஆட்டம்..
- ‘கோலி, தோனி பவுலிங் ப்ராக்டீஸ்’.. அப்போ மத்தவங்க என்ன பண்றாங்க? பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!
- ‘டி20 மேட்ச்சா இல்ல உலகக்கோப்பையானே தெரியல’.. பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
- 'டி20 டைப்ல விக்கெட் எடு.. முடிஞ்சா மிட் ஆஃப்ல மோத சொல்லு', வீரருக்கு சச்சினின் வைரல் டிப்ஸ்!
- ‘6 வருஷத்துக்கு முன்னாடி சொன்னத இப்போ சொல்லி இருக்கலாம் பாஸ்’.. ஆம்லா தலையை பதம்பாத்த இங்கிலாந்து வீரர்!
- ‘டேவிட் வார்னர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா’?.. என்ன காரணம்?
- ‘உலகக்கோப்பைல எனக்கு பிடித்த பேட்ஸ்மேன், பவுலர் யார் தெரியுமா’?.. மனம் திறந்த சச்சின்!
- ‘அசால்டாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக்ஸ், அதிர்ச்சியடைந்த பேட்ஸ்மேன்’.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’!.. வைரல் வீடியோ