‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா நோ பால் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சற்று தடுமாறி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேரமுடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்துள்ளது. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
இப்போட்டியின் 39 -வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா கை நழுவி நோ பாலாக வீசினார். தரையில் 5 முறை குத்தி மெதுவாக சென்ற பந்தை தென் ஆப்பிரிக்க கேப்டன் டு ப்ளிஸிஸ் அடிக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் 2016 -ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது ஜடேஜா கை நழுவி நோ பால் வீசிய வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..!
- Watch Video: பந்த காணோமே...ஓடி,ஓடி 'தேடிய' வீரர்கள்..விழுந்து,விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!
- ‘எந்த கிரிக்கெட் அகாடமியும் சேத்துக்கல’ ‘அதான் மகளோட முடிய வெட்டி மகன்னு சொல்லி சேத்தேன்’..!
- ‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..
- ‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’!
- ‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..!
- இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடிய தமிழக வீரர்..! முதல் டெஸ்ட்டில் நடந்த சர்ப்ரைஸ்..!
- ‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..!