‘அவரு ரன் எடுக்க போவாரா இல்ல பேட்ட எடுக்க போவாரா’.. ‘அடிச்ச அடியில் அந்தரத்தில் பறந்த பேட்’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 54 -வது போட்டி இன்று(04.05.2019) பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 -ல் தோல்வியும், 4 -ல் வெற்றியும் பெற்று 9 புள்ளிகளுடன்  கடைசி இடத்தில் உள்ளது. மேலும் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் பெங்களூரு அணி இழந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 10 போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து வந்த விராட் கோலி பெங்களூரு அணியின் இன்றைய கடைசி போட்டியில் டாஸ் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாக கூறியுள்ளார். டாஸ் வென்ற கோலி முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களின் முடிவில் 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹெட்மெயர் 75 ரன்களும், குர்கீராட் சிங் 65 ரன்களும் எடுத்து அசத்தினர். இப்போட்டியில் ஹெட்மெயர் அடித்த பந்து மறுமுனையில் இருந்த குர்கீராட் சிங்கின் பேட்டில் பந்து பேட் அந்தரத்தில் பறந்தது.

IPL, IPL2019, RCBVSRH, PLAYBOLD, ORANGEARMY, HETMYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்