‘எப்பா இது வேற லெவல் கேட்ச்சா இருக்கும் போல’.. ‘வந்த முதல் பந்தே அவுட்டா’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணிக்கு 162 என்ற இலக்கை கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 29 -வது போட்டி இன்று(14.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்கார்களாக க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் சுனில் நரேன் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா மற்றும் க்றிஸ் லின் கூட்டணி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. இதில் நிதிஷ் ராணா 21 ரன்களில் தாஹிர் வீசிய ஓவரில் அவுட்டாகி வெளியேற, அடுத்த வந்த ராபின் உத்தப்பாவும், தான் எதிர் கொண்ட முதல் பந்தில் டு பிளிஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்மாக க்றிஸ் லின் 82 ரன்கள் அடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

IPL, IPL2019, IMRANTAHIR, FAFDUPLESSIS, WHISTLEPODU, KKRVCSK, YELLOVE 💛

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்