‘1 ரன்னில் தோல்வி’.. ஆனா, ‘தல’அடிச்ச அந்த ஒரு சிக்ஸர்.. மொத்த மைதானமே அதிர்ந்த விசில் சத்தம்.. மிரண்டு போன ஆர்சிபி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியின் கேப்டன் தோனி கடைசி வரை போராடியும் நூழிலையில் பெங்களூருவிடம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

ஐபிஎல் டி20 லீக்கின் மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 38 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 39 -வது போட்டியான இன்றைய(21.04.2019) போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் கோலி 9 ரன்கள் எடுத்திருந்த போது தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பார்தீவ் பட்டேல் மற்றும் டிவில்லியர்ஸ் கூட்டணி அதிரடியாக ஆடி ரன் சேர்க்க தொடங்கியது. இதில் அதிகபட்சமாக பார்தீவ் பட்டேல் 53 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் டுபிளிஸிஸ் 5 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த ரெய்னாவும் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் அம்பட்டி ராயுடு கூட்டணி நிதானமாக ஆடியது. இதில் அம்பட்டி ராயுடு 29 ரன்களில் அவுட்டாக, அடுத்த வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாகி கொண்டே இருக்க மறுமுனையில் தோனி அதிரடி காட்டிக் கொண்டிருந்தார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 5 பந்துகளில் சிக்ஸர், பவுண்ட்ரி என விளாசி 24 ரன்களை தோனி எடுத்தார். 1 பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், நூழிலையில் சென்னை வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இதில் தோனி அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, IPL2019, MSDHONI, THALA, WHISTLEPODU, YELLOVE, RCBVCSK, VIRALVIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்