‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 2 -வது டி20 போட்டி இன்று (18.09.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க வீரர்கள் பேட்டிங் செய்தனர். இதில் அதிகபட்சமாக டி காக் 52 ரன்களும், டெம்பா பாவுமா 49 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களில், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் தவான் 40 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து 19 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் 13 -வது ஓவரை வீசிய ஜடேஜா, தென் ஆப்பிரிக்க வீரரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நல்லா விளையாடுறாரு’.. ‘அப்றம் ஏன் சரியா வாய்ப்பு கிடைக்கலனே தெரியல’.. பிரபல வீரர் குறித்து சொன்ன புது பேட்டிங் கோச்..!
- ‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!
- ‘ஹாப்பி பர்த்டே அஸ்வின்’.. பிசிசிஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- நம்ம 'சிங்கம்' இப்போ 'டில்லி' ராஜா .. சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்ற 'சென்னை' கிங்ஸ் வீரர்!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!
- டிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’?... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்..? சென்னை அணி உரிமையாளரின் அதிரடி பதில்..!
- ‘புது ஜெர்சியோட இதுதான் முதல் மேட்ச்’.. ஆனா டாஸ் போடறதுக்குள்ள இப்டி ஆகிடுச்சே..! சோகத்தில் ரசிகர்கள்..!
- 'மத்ததெல்லாம் உதறித் தள்ளுங்க'... 'முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு'... 'பிசிசிஐ அதிரடி உத்தரவு'