‘இப்டி நடக்கும்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க’.. ‘ஒரு இன்ச் தான் கேப்’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டின் ஹெல்மெட்டில் பந்து சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 86 ரன்களும், ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து விளையாடிய இலங்கை அணி 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலாந்து பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸின் போது இலங்கை வீரர் எம்புல்டெனியா வீசிய பந்து ட்ரெண்ட் போல்ட்டின் ஹெல்மெட்டில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SLVNZ, BOULT, HELMET, TEST, BALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்