‘ஹாப்பி பர்த்டே அஸ்வின்’.. பிசிசிஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று(17.09.2019) தனது 33 -வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனால் விளையாட்டு வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2011 -ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார்.அப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸில் 3 விக்கெட்டுகளும், 2 -வது இன்னிங்ஸ்ஸில் 6 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். மேலும் அந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இதன்மூலம் அறிமுக தொடரிலே ஆட்ட நாயகன் விருது வென்ற 3 -வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 342 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100, 200, 300 -வது விக்கெட்டுகளை எடுத்த வீடியோவை வெளியிட்டு பிசிசிஐ அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்படி பண்ணி இருக்க கூடாது'...ஆனா மன்னிச்சிட்டோம்...'சிக்கலில் இருந்து தப்பிய 'தினேஷ் கார்த்திக்'!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!
- உங்க 'பிறந்தநாளை வச்சு'.. நீங்க எப்படிப்பட்ட 'கேரக்டர்'னு தெரிஞ்சுக்கங்க!
- டிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’?... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை!
- அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்..? சென்னை அணி உரிமையாளரின் அதிரடி பதில்..!
- ‘என்ஜினியர்ஸ்டே ஸ்பெஷல்’.. இந்திய அணியில் கலக்கிய என்ஜினியர்கள்..! யார் யார்னு தெரியுமா..?
- ‘புது ஜெர்சியோட இதுதான் முதல் மேட்ச்’.. ஆனா டாஸ் போடறதுக்குள்ள இப்டி ஆகிடுச்சே..! சோகத்தில் ரசிகர்கள்..!
- ப்பா 'என்ன' ஒரு ஆட்டம்..7 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 'தெறிக்க' விட்ட கூட்டணி-வீடியோ உள்ளே!
- 'மத்ததெல்லாம் உதறித் தள்ளுங்க'... 'முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு'... 'பிசிசிஐ அதிரடி உத்தரவு'
- ‘அவரு முட்டி மோதிப் பாத்தும் முடியாதத’.. ‘இவரு அசால்டா பண்ணிட்டாரு’.. ‘ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்’..