‘ஐபிஎல்-ல தோனிக்கு நடந்தது மாதிரியே இவருக்கும் நடந்திருக்கு’.. முதல் மேட்ச்சை பரபரப்பாக்கிய அந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

12 -வது உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டி நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இதில் உலகக்கோப்பையின் முதல் ஓவரை தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் வீசினார். முதல் ஓவரிலேயே இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்ட்டோவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். இங்கிலாந்து சார்பாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களும், ஜசன் ராய் 54 ரன்களும், ஜே ரூட் 51 ரன்களும், கேப்டன் மோர்கன் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 39.5 ஓவர்களின் முடிவில் 207  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக டி காக் 68 ரன்கள் எடுத்தார். இப்போட்டின் 11 -வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் வீசினார். அப்போது ஆதில் ரஷித் வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டு சென்றது. ஆனால் பெய்ல் கீழே விழவில்லை. இதனால் பேட்டிங் செய்துகொண்டிருந்த டி காக்கிற்கு அது நாட் அவுட்டாக அமைந்தது. ஐபிஎல் தொடரில் தோனி உள்ளிட்ட பல வீரர்களுக்கு இதேபோல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, ENGVSA, RASHID, QUINTON DE KOCK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்