"ரிஷி தவான் கண்ணாடி'ய பாத்து தான் ராயுடு பொளந்து கட்டி இருப்பாரு.." முன்னாள் வீரர் போட்ட முடிச்சு.. "இதுல என்னங்க இருக்கு??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், ஐபிஎல் தொடரில் 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் தவான் பெற்றுள்ளார். அதே போல, சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், 1000 ரன்களைக் கடந்தும் அசத்தி உள்ளார் ஷிகர் தவான்.

ராயுடுவின் அதிரடி ஆட்டம்

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. நிதானமான ஆட்டமாகவும் மாற, தேவைப்படும் ரன் ரேட், சிஎஸ்கேவுக்கு அதிகமாக இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் களமிறங்கிய ராயுடு, நாலாபக்கமும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விரட்டினார்.

தோல்வி அடைந்த சிஎஸ்கே

39 பந்துகளில், 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் எடுத்திருந்த ராயுடு, ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், கடைசி இரண்டு ஓவர்களில், சிஎஸ்கேவின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராயுடுவை பாராட்டும் ரசிகர்கள்

இதனால், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் நான்காவது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலிலும் 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தோல்வியின் மூலம், சென்னை அணியின் பிளே ஆப் சுற்று கேள்விக்குறி ஆகியுள்ளது. இருந்த போது, மற்ற அனைத்து வீரர்கள் சொதப்பிய நேரத்தில், ராயுடு மட்டும் தனியாளாக போராடியது பற்றி, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முடிச்சு போட்ட வாசிம் ஜாபர்

இந்நிலையில், ராயுடுவின் ஆட்டத்தைக் குறிப்பிட்டு, முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் போட்டுள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ராயுடுவின் பேட்டிங்கை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்த ஜாபர், "ராயுடு இன்று மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தார். ரிஷி தவானின் கண்ணாடி, அவருக்கு எதையாவது நினைவுபடுத்தி இருக்கலாம்" என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில், ராயுடுவுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது தேர்வுக் குழு தலைவராக இருந்த பிரசாத், விஜய் ஷங்கரை ஒரு '3 Dimesnion' வீரர் என குறிப்பிட்டிருந்தார். ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

3D க்ளாஸ தான் சொல்றாரா??..

மேலும், விஜய் ஷங்கரை 3D என குறிப்பிட்டு, ராயுடு கலாய்த்து செய்திருந்த ட்வீட்டும், அந்த சமயத்தில் பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதனையடுத்து, பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ரிஷி தவானின் மூக்குப் பகுதியில் சர்ஜரி ஒன்று நடைபெற்றிருந்ததால், Face Guard ஒன்றை வைத்திருந்தார். அது பார்ப்பதற்கு 3D கண்ணாடி போல இருந்தது என்பதைத் தான் வாசிம் ஜாபர் அப்படி மறைமுகமாக கலாய்த்து குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ராயுடு பேட்டிங் தொடர்பாக வாசிம் ஜாபர் பகிர்ந்துள்ள ட்வீட், தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RISHI DHAWAN, AMBATI RAYUDU, CSK VS PBKS, IPL 2022, WASIM JAFFER, வாசிம் ஜாபர், ராயுடு, ரிஷி தவான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்