"'ஐபிஎல்' இன்னும் ஆரம்பிக்கல... அதுக்குள்ளயே 'கச்சேரி'ய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.." 'வாகன்' போட்ட 'ட்வீட்'.. பங்கமாக கலாய்த்த முன்னாள் 'இந்திய' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் தங்களது அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் இப்போதே காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

அதே போல, ஏலத்தில் புதிதாக தங்களுக்கு பிடித்தமான அணிகள் எடுத்துள்ள வீரர்கள் மீதும், ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், பல கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், அனைத்து அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை கொண்டு எந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்றும் கணித்து கூறி வருகின்றனர்.

இதில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), தனது ட்வீட்டில், 'இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையைத் தட்டிச் செல்லும். அப்படி அவர்கள் ஏதேனும் வினோதமாக அந்த வாய்ப்பை இழந்தால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையைக் கைப்பற்றும்' என பதிவிட்டிருந்தார்.

 



இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர் (Wasim Jaffer), வாகனின் ட்வீட்டை பகிர்ந்து, அதனை கிண்டல் செய்யும் வகையில் மீம் ஒன்றை பகிர்ந்தார். இந்த மீமில், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் வாகனின் கணிப்பால், மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு காரணம், பொதுவாக வாகன் ஏதாவது கணித்துச் சொன்னால், அது நடக்காது என்பது தான். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றும் என வாகன் கணித்திருந்தார். ஆனால், கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுஃற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியிருந்தது. அதற்கு முந்தைய சீசனில் கூட, வாகனின் கணிப்புகள் அதிகம் பலிக்கவில்லை.

இதனால், இந்த முறை அவர் மும்பை அல்லது ஹைதரபாத் அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என கணித்துள்ளதால், அவர்கள் நிச்சயம் வெல்லமாட்டார்கள் என்பதை நினைத்துக் கொண்டு, மற்ற அணிகள் சந்தோஷத்தில் இருப்பதாக ஜாஃபர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது, மைக்கேல் வாகன் செய்திருந்த ட்வீட்கள், கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்