இந்திய அணியை சீண்டிய வாகன்.. பங்கமாக வச்சு செஞ்ச வாசிம்.. உங்களுக்கு இது தேவையா பாஸ்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மைக்கேல் வாகனை கிண்டல் செய்யும் வகையில், வாசிம் ஜாஃபர் செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி, வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பாக்சிங் டே அன்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியிருந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து திணறல்

தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியில் அறிமுக பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

ஆதிக்கம்

மொத்தம் 68 ரன்களில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை மீண்டும் தழுவியது. மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில், ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து என எந்த அணி வெற்றி பெற்றாலும், போட்டியில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். ஆனால், இந்த முறையோ முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கடுமையான விமர்சனம்

பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என எதிலுமே ஆஸ்திரேலிய அணிக்கு சிறிய ஒரு நெருக்கடியைக் கூட இங்கிலாந்து வீரர்கள் உருவாக்கவில்லை. இதனால், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல முன்னாள் வீரர்கள், அங்குள்ள சில முன்னணி நாளிதழ்கள், இங்கிலாந்து அணியின் ஆட்டத்திறனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

பிரதமரின் பாதுகாப்பிற்காக '12 கோடியில்' அதிநவீன கார்...! - இந்த காரில் 'இவ்வளவு' விஷயங்கள் இருக்கா...?

வாகனின் கிண்டல்

தற்போது, ஆஷஸ் தொடரையும் இங்கிலாந்து அணி இழந்துள்ள நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை, இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியைத் தழுவியிருந்தது.

வசமாக சிக்கிய வாகன்

இதனைக் கிண்டல் செய்த வாகன், 'இந்தியா 92 ரன்களில் ஆல் அவுட்.. இந்த காலத்திலும் ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை' என இந்திய அணியின் ஆட்டத்தை விமர்சித்திருந்தார். இந்நிலையில், தற்போது இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெறும் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
 

 

வாசிம் ஜாஃபர் ட்வீட்

இதனை வாகனுடன் ஒப்பிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியை விமர்சனம் செய்ததை ஞாபகப்படுத்தும் முறையில் வீடியோ ஒன்றை வாசிம் ஜாஃபர் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை அதிகம் பகிரும் நெட்டிசன்கள், எப்போதும் மற்ற அணிகளை அதிகம் கிண்டல் செய்யும் வாகனுக்கு இது தேவை தான் எனது போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

மேலும், இந்த வீடியோவை மைக்கேல் வாகனே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'வெரி குட் வாசிம்' என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்கள், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

WASIM JAFFER, MICHAEL VAUGHAN, ENGLAND, இந்திய அணி, வாகன், வாசிம் ஜாஃபர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்