எப்பவும் ஏதாவது சொல்லிட்டே இருப்பாரே.. இப்போ என்ன ‘சைலன்ட்’ மோடுக்கு போய்ட்டாரு.. வாகனை வச்சு செஞ்ச முன்னாள் ‘இந்திய’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2021) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் 24-ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

இதில் நேற்று துபாய் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 49 ரன்களும், மொயின் அலி 43 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை (Michael Vaughan) இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் (Wasim Jaffer) கிண்டல் செய்துள்ளார்.

அதில், ‘இந்த வெற்றியில் 3 விஷயங்கள் தனித்து தெரிந்தன. கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங், பும்ரா, அஸ்வின் மற்றும் முகமது ஷமியின் பவுலிங். மற்றொன்று மைக்கேல் வாகன் ஆஃப் லைனிலேயே இருந்தது’ என வாசிம் ஜாபர் ட்வீட் செய்துள்ளார். பொதுவாக எப்போதும் இந்திய அணியை விமர்சனம் செய்யும் மைக்கேல் வாகன் இந்த போட்டி குறித்து ஒரு ட்வீட் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்